கும்முன்னு இருக்கன்னு சொல்லி அந்த இடத்தில் கை வச்சிட்டாரு.. பகீர் கிளப்பும் நடிகை காயத்ரி ரேமா..!

Author: Vignesh
23 April 2024, 11:14 am

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரேமா. மேலும், இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான டோரா திரைப்படத்திலும் நடித்துள்ளார். முன்னதாக, ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்திருக்கிறார்.

Gayatri Rema

மேலும் படிக்க: ஒரே ஒரு படம் தான்.. 100 -கோடி வசூல் BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர் ..!

சினிமா மற்றும் வெப் சீரிஸ் என பல படைப்புகளிலும் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்த “வா வரலாம் வா” படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில், தான் பெரிதாக ஷைன் ஆகாமல் போனதற்கு அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டேன் என்கிற முடிவில் இருப்பது தான் காரணம் என ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார். மேலும், நடிக்க சொன்னால் ஓகே படுக்க சொன்னால் எப்படி பாஸ் என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்.

Gayatri Rema

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காயத்ரி சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளார். அதில், அவர் பிந்து மாதவியை வைத்து பிரபல இயக்குனர் எடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த படத்தில் தான் ஹீரோயினாக நடிக்க இருந்ததாகவும் அந்த இயக்குனருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய பின் பகுதியை பிடித்து விட்டார்.

Gayatri Rema

மேலும் படிக்க: அந்த சமயத்தில் யாரும் அதை பண்ணாதீங்க.. விஜய் பட நடிகை காயத்ரி ரெட்டி அட்வைஸ்..!

உடனே தனக்கு கோபம் வந்துவிட்ட நிலையில், கையை எடுங்க உங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓங்கி அறஞ்சா உங்களுக்கு அசிங்கமாயிடும் என்று கண்டபடிக்கு திட்டி விட்டேன். இதையெல்லாம் எனக்கு பிடிக்காது என்று கூறியதும், சரி மா கும்முனு இருக்கிற பார்த்தவுடன் மூட் ஆச்சு என்று பச்சையாக அவர் பேசினார். அந்த இயக்குனர் பெயரை சொல்ல விரும்பவில்லை என்று காயத்ரி ரேமா தற்போது அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi OTT release announcement ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…