திருமணம் ஆகாத விரக்தி? விஷம் குடித்து தற்கொலை செய்த விஏஓ : கோவையில் SHOCK!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2024, 4:27 pm

திருமணம் ஆகாத விரக்தி? விஷம் குடித்து தற்கொலை செய்த விஏஓ : கோவையில் SHOCK!

பொள்ளாச்சி அடுத்துள்ள கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கருப்புசாமி என்பவர் உடுமலை அடுத்துள்ள பெரியகோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய சொந்த ஊரான கூள நாயக்கன்பட்டியில் உள்ள அவர் வீட்டில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் செல்பாஸ் மாத்திரையை உட்கொண்டு தற்கொலை முயற்சி எடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க: மக்களே வெளிய போறீங்களா? சுட்டெரிக்கும் வெயில்.. இந்தியாவில் ஈரோடு TOP.. வானிலை மையம் WARN!

தற்போது அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் கருப்புசாமி குறித்து மக்கள் மித்தரன் வார பத்திரிகையில் இவர் அதிகம் லஞ்சம் வாங்குவதாக செய்தி வந்ததாக வெளியிட்டதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்புசாமி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது திருமணம் ஆகாதா விரக்தி போன்ற வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில்
கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!