ப்ரியா பவானி ஷங்கரை அசிங்கப்படுத்திய விஷால்?.. கண்டுக்காமல் அலட்சியம் செய்த ஹரி..!

Author: Vignesh
23 April 2024, 6:30 pm

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

priya bhavani shankar

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். இதனிடையே திடீரென பிரியா பவானி ஷங்கர் தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால், அதெல்லாம் வதந்தி சமீபத்தில் வெளிநாட்டில் காதலனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாக விஷால் தற்போது, பல விஷயங்களை செய்து சமூக வலைதளங்களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். தான் சும்மா இருந்தாலும் தன்னுடைய வாய்ஸ் சும்மா இருக்காது என்று சொல்வதற்கு ஏற்ப தேவையில்லாத வீண் பேச்சால் பல சர்ச்சைகளிலும் சிக்கி கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். அதற்கு ஏற்றார் போல் இவருடைய படங்களும் வியாபாரமாகாமல் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

rathnam

மேலும் படிக்க: ஆத்தாடி இம்புட்டு விலையா?.. ஷங்கர் மகள் கல்யாணத்தில் கண்ணைப் பறித்த நயனின் Watch..!

இந்நிலையில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் சிங்கிள் ஹீரோவாக விஷால் ரத்தினம் படத்தில் நடித்திருந்தார். இதில், இவருக்கு ஜோடியாக பிரிய பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ரத்தினம் படத்தில் உள்ள மொத்த டீமும் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்காக, விஷால் மற்றும் ஹரி இருவரும் சேர்ந்து படத்தின் பிரமோஷன் களை செய்து வருகிறார்கள்.

rathnam

ஆனால், இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் மட்டும் ஒதுக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக பிரியா பவானி சங்கருக்கு 80 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் பிரமோஷன் நடந்து வரும் நிலையில், பிரியா பவானி சங்கரை கூப்பிடாமல் விஷால் மற்றும் ஹரி மட்டுமே பிரமோஷன் பணிகளை செய்து வருவது பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

hari-priya-vishal

மேலும் படிக்க: அந்த மாதிரி பார்த்தாரு.. விஜய் குறித்து உண்மையை வெளியிட்ட கில்லி பட நடிகை..!

மேலும், பிரியா பவானி சங்கர் முதல் முதலாக நடித்து அறிமுகமான மேயாத மான் படத்தை தயாரித்த ஸ்டோன் பென்ச் நிறுவனம் தான் இந்த ரத்தினம் படத்தையும் தயாரித்துள்ளது. பிரியா பவானி சங்கர் தவிர்க்கிறாரரா அல்லது படக்குழு இவரை தவிர்க்கிறதா என்று தெரியவில்லை. எனினும், இதற்கு பின்னணியில் ஏதோ ஒரு விவகாரம் இருப்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிகிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!