ஷூட்டிங் செய்ய வந்த ‘திரிஷா’வை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்.. திணறிப் போன ஈரோடு..!(Video)
Author: Vignesh23 April 2024, 6:47 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஆத்தாடி இம்புட்டு விலையா?.. ஷங்கர் மகள் கல்யாணத்தில் கண்ணைப் பறித்த நயனின் Watch..!
பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதையடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.
மேலும் படிக்க: அந்த மாதிரி பார்த்தாரு.. விஜய் குறித்து உண்மையை வெளியிட்ட கில்லி பட நடிகை..!
இந்நிலையில், டாப் ஹீரோ படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் த்ரிஷாவின் கில்லி திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் அந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். தற்போது, திரிஷா மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு த்ரிஷா கேரவனில் இருக்க ரசிகர்கள் கேரவனை சூழ்ந்து கொண்டனர். அவர்களை ரசிகர்களை சந்தித்து திரிஷா கை அசைத்து இருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Trisha shooting spot 💥 Shooting is now progressing in Erode ❤
— Vakugu (@vakugu) April 22, 2024
Her craziness 😍😍♥️♥️#TrishaKrishnan pic.twitter.com/ftT517y59T