அடுத்து சென்னை தான்…. ஜுன் 4க்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் கைதாக வாய்ப்பு ; எச். ராஜா போட்ட புதுகுண்டு!!

Author: Babu Lakshmanan
25 April 2024, 5:05 pm

டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும் என்றும், ஜூன் 4க்கு பிறகு சாராய அதிபர்கள், ஊழல் செய்த அமைச்சர்கள், முதல்வரும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக பாஜக நிர்வாகி எச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினை கவர்வதற்காக, பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக, பிரித்தாளும் தனது தேர்தல் சித்து விளையாட்டை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: பிரதமர் மோடி சரியாத்தான் பேசியிருக்காரு… அந்த ஒத்த வார்த்தை தான்… வீணாக அரசியல் செய்யும் காங்கிரஸ் ; இராம ஸ்ரீனிவாசன்.!!

ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் தேர்தல் விதிமுறையை மீறவில்லை. அங்கு 90 வினாடிகள் பேசிய பிரதமர் முஸ்லிம் என்ற வார்த்தையை ஒரு முறை கூட பேசவில்லை. தேர்தல் ஆணையத்திடம் பிரதமருக்கு எதிராக மனு அளித்தாலும், மதரீதியாக பிரதமர் பேசாததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினரை இணைக்கவும், ஜாதி அடிப்படையில் இந்துக்களை பிரித்து ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சிக்கிறது.

செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்க படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. அதனால் செல்போனில் அதிகம் உரையாடுவது கிடையாது. டில்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும். சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள். அதில் முதலமைச்சரா? அமைச்சரா? இருக்கின்றார்களா என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

மணல் குவாரி வழக்கில் ED யில் ஆஜரான IAS அதிகாரிகளுக்கு பல தகவல் தெரியும். உச்ச நீதிமன்ற உத்தரவின் படியே ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராகி உள்ளனர், என அவர் தெரிவித்தார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?