அக்கா நீங்க கூப்பிடுங்க.. அவன் வருவான்.. உயிரிழந்த BJP பிரமுகர் : ஆறுதல் கூற முடியாமல் தவித்த வானதி சீனிவாசன்!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2024, 6:45 pm

அக்கா நீங்க கூப்பிடுங்க.. அவன் வருவான்.. உயிரிழந்த BJP பிரமுகர் : ஆறுதல் கூற முடியாமல் தவித்த வானதி சீனிவாசன்!

நேற்று மாதம்பட்டி அருகே பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் நரேஷ் குமார் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றபட்டது.

நரேஷ்குமார் உயிரிழந்த தகவலை அடுத்து பிரேத பரிசோதனை அறையின் முன்பு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் திரண்டனர்.

இதனிடையே அங்கு வந்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உறவினர்களை சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். பின்னர் நரேஷ் குமார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க: PM Modi பதறுகிறார்.. கண்ணீர் விட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : ராகுல் காந்தி தாக்கு!

பின்னர் நரேஷ்குமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒரே நேரத்தில் கிளம்பியதால் அந்த சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சீர் செய்து அனுப்பினர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 407

    0

    0