ஹெல்மெட்டால் ஒரே அடி… சுருண்டு விழுந்த இளம்பெண் ; பதற வைக்கும் சம்பவம்… எஸ்கேப்பான நபரை பிடித்து விசாரணை!!

Author: Babu Lakshmanan
27 April 2024, 5:05 pm

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எப்போதும் பிஸியாக இருக்கும் கோயம்பேடு மேம்பாலத்தில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் பைக்கில் நேற்று மதியம் வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனத்தை நிறுத்தி விட்டு, இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டு இருந்தனர்.

ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அந்த நபர், நடு ரோடு என்றும் பாராமல் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கினார். மேலும், தான் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் ஓங்கி அடித்துள்ளார். இதில் அந்தப் பெண் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார்.

மேலும் படிக்க: திடீரென மத சர்ச்சையில் சிக்கிய CWC இர்ஃபான்… போடா செங்கல் சைகோ… என லிஸ்ட் போட்டு பதிலடி…!!

இதன் பிறகு சாலையில் மயக்கமடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்த ஆண் நண்பர் மற்றவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால் ஏதும் பிரச்சினை வந்துவிடுமோ என்று பயந்து அந்த பெண்ணை அந்த இளைஞரே இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார்.

இதனிடையே, இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் செல்போனில் வீடியோவாக எடுத்து போலீசாருக்கு அனுப்பி புகார் தெரிவித்தார். அதன்பேரில், வாகன எண்ணை வைத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 264

    0

    0