பாஜக மாநில தலைவர் மீது பாய்ந்தது FIR.. தேர்தல் ஆணையம் அதிரடி ACTION!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2024, 6:14 pm

பாஜக மாநில தலைவர் மீது பாய்ந்தது FIR.. தேர்தல் ஆணையம் அதிரடி ACTION!

பாஜக தலைவர் சி.டி.ரவி தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் குடிமக்களிடையே வெறுப்பு மற்றும் பகைமையை ஊக்குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையை சிக்கமகளூரு தேர்தல் அதிகாரிகள் துவக்கி உள்ளனர். கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி, சிக்கமகளூரு தேர்தல் அதிகாரிகள், சி.டி.ரவியின் X இல் பதிவிட்டதற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 505(2) (பகை, வெறுப்பை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் அறிக்கைகள் அல்லது ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!