கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் மனைவி செய்த செயல்.. SHOCKஆன கணவர்.. துண்டான கை!!
Author: Udayachandran RadhaKrishnan27 April 2024, 6:58 pm
கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் மனைவி செய்த செயல்.. SHOCKஆன கணவர்.. துண்டான கை!!
குடியாத்தத்தில் இரவு வீடியோ காலில் கள்ளக்காதலனுடன் பேசிய மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவன்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி சேகர் வயது 41. இவருடைய மனைவி ரேவதி வயது 35.
இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளன. அதில் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகி கணவருடன் வாழ்ந்து வருகின்றனர். மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறாள்.
சேகரின் மனைவி ரேவதி வீட்டு வேலை செய்து சம்பாதித்து வந்துள்ளார். இந்நிலையில் சேகரின் மனைவி ரேவதி சில மாதங்களுக்கு முன் வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதைக் கண்ட சேகர் மனைவியை எச்சரித்து உள்ளார்.
இருப்பினும் ரேவதி பல நேரங்களில் செல்போன் மூலம் பேசுவதும் சமூக வலைதளங்களில் பார்த்து வருவது தொடர்பாக சேகருக்கும் ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய முன் தினம் இரவு ரேவதி கள்ளக்காதலனுடன் செல்போனில் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்ட சேகர் ரேவதியிடம் யார் என்று கேட்டுள்ளார்
அதற்கு ரேவதி சரியான முறையில் பதில் சொல்லாததால் ரேவதிக்கும் சேகருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது
பின்னர் வாய் தகராறு முத்தியதில் ஆத்திரம் அடைந்த கணவர் சேகர் அருகே இருந்த கத்தியை எடுத்து செல்போன் வைத்து வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த வலது கையை வெட்டியுள்ளார். இதில் மனைவி ரேவதியின் கை துண்டாகியது
வலியால் ரேவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ரேவதியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கத்தியுடன் சேகர் குடியாத்தம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
அங்கு சேகர் அளித்த வாக்குமூலத்தில் மனைவி கள்ளக்காதலை தட்டி கேட்டு ஏற்பட்ட தகராறு ஆத்திரமடைந்து மனைவியின் கையை கத்தியால் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: பாஜக மாநில தலைவர் மீது பாய்ந்தது FIR.. தேர்தல் ஆணையம் அதிரடி ACTION!
உடனடியாக வழக்கு பதிவு செய்து குடியாத்தம் காவல் துறையினர் சேகரை சிறையில் அடைத்தனர்.
செல்போன் மூலம் வீடியோ காலில் கள்ளக்காதல் செய்த மனைவியை செல்போன் வைத்திருந்த கையை வெட்டிய கணவரால் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.