தமிழ்நாட்டு மக்களுக்கு PM மோடி செய்த பச்சைத் துரோகம் ; வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2024, 3:16 pm

தமிழ்நாட்டு மக்களுக்கு PM மோடி செய்த பச்சைத் துரோகம் ; வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு!!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிச்சாங் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிச்சாங் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது.

ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.3498.82 கோடி அளித்திருக்கிறது. அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!