அண்ணாமலை மீதான வழக்கில் அதிரடி திருப்பம் : உச்சநீதிமன்றம் உத்தரவு.. BJP செம Happy..!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 6:36 pm

அண்ணாமலை மீதான வழக்கில் அதிரடி திருப்பம் : உச்சநீதிமன்றம் உத்தரவு.. BJP செம Happy..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மனு அளித்திருந்தார்.

கடந்த 1956 இல் நிகழ்ந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, முத்துராமலிங்க தேவர், அண்ணாதுரை மற்றும் பிடிஆர்-ஐ எச்சரித்து மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்த அபிஷேகம் செய்யப்படும் என பேசியதாக அண்ணாமலை மீது சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் புகாரை எடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், வரலாற்றில் பதிவு செய்யப்படாத தகவலை அண்ணாமலை பேசி மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டி மத நம்பிக்கை இல்லாதவர்களின் ரத்தத்தை மதுரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்வதாக, தான் எண்ண முடிகிறது எனவும் கூறினார்.

மேலும் படிக்க: ஒரே ஒரு VIDEO… தெலங்கானா முதலமைச்சருக்கு எதிராக போலீசார் சம்மன் : ஆஜராக உத்தரவு!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க திமுக அரசு மற்றும் காவல்துறை முன்வராத நிலையில் தான் தனி மனிதமாக முன்வந்து அவர் மீது வழக்குகளை தொடர்ந்து வருவதாக பியூஸ் மனுஷ் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக தீபாவளி பட்டாசு குறித்து இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது சேலம் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மீதான விசாரணைக்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அண்ணாமலை ஆஜராக சமன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இவ்வழக்கில் அண்ணாமலை ஆஜராக சேலம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை வழக்கு தொடர்ந்தார். அதில், என் பேட்டியால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. என் பேச்சின் உள்ளடக்கம் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் சேலம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அண்ணாமலையின் மனுவை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலையின் பேச்சையும் கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது 6 வாரங்களில் புகார் மனுதாரர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் செப்டம்பர் 9-ந் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கான இடைக்கால தடை தொடரும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 309

    0

    0