தடுமாறியதால் தடம் மாறிய ஹெலிகாப்டர்.. நூலிழையில் உயிர் தப்பிய AMITSHAH!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 8:04 pm

தடுமாறியதால் தடம் மாறிய ஹெலிகாப்டர்.. நூலிழையில் உயிர் தப்பிய AMITSHAH!

மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பியுள்ளார்.

அதாவது, தேர்தல் பரப்புக்காக இன்று பீகார் மாநிலம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு நடந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

பின்னர் பெகுசராய் பகுதியில் இருந்து அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் புறப்பட்டபோது திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது தூரம் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து லேசாக நிலை தடுமாறியுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் விமானிகள் உடனடியாக ஹெலிகாப்டரை இயல்புநிலைக்கு கொண்டு வந்ததை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் சீராக பறந்து சென்றது.

மேலும் படிக்க: குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க கிணற்றில் இறங்கிய தாய் : கனநேரத்தில் நடந்த SHOCK!

பலத்த காற்று காரணமாக சமநிலையை இழந்த ஹெலிகாப்டரை விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக மத்திய உள் அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்