வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்.. பட்டப்பகலில் கும்பல் அட்டகாசம் : அழைத்தும் அலட்சியம் காட்டிய POLICE… பரபர பின்னணி!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 2:52 pm

வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்.. பட்டப்பகலில் கும்பல் அட்டகாசம் : அழைத்தும் அலட்சியம் காட்டிய POLICE… பரபர பின்னணி!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு காந்தி கிராமம் ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் மனோகரன். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தனியார் சிமெண்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத் தேவைக்காக கடந்த 2022ம் ஆண்டு 23 லட்ச ரூபாய்க்கு வீட்டு பத்திரத்தை எழுதி கொடுத்து அடமான கடனாக தனியார் நிதி நிறுவனரிடம் பெற்றுள்ளார்.

முறையாக வட்டியும், அசலும் திரும்ப செலுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கறிஞரும் நிதி நிறுவன நடத்தி வரும் ரகுநாதன் மற்றும் இளங்கோ அவர்களிடம் வீட்டு பத்திரத்தை திரும்ப கேட்ட போது மேலும், 10 லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து கரூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனோகரன் வழக்கு தொடர்ந்து, இரண்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் பத்துக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் மனோகரன் வீட்டிற்கு வந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனோகரன் தனது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காண்பித்து ரவுடிகள் பட்டப்பகலில் தங்கள் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

இதனை தடுக்க முற்பட்டபோது, திடீரென கல்வீசி தாக்கியதாகவும், அப்பொழுது வீட்டின் முன் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி நொறுக்கப்பட்டது. வீட்டை சேதப்படுத்தினர் மேலும் ஏற்கனவே இது போன்று கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் வீட்டினுள் அத்துமீறி நுழைய முயன்றவர்களை சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் விரட்டினோம்.

அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீண்டும் இது போன்ற நேற்று மதியம் ஒரு மணி அளவில் பத்திற்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தினர் நேற்று 3 மணி நேரம் தாமதமாக வந்த காவல்துறையினர் புகாரை பெற்றுக் கொண்டு தற்பொழுது வரை எஃப் ஐ ஆர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதியப்படாத நிலையில் நேற்று இரவு மனோகரன் பசுபதிபாளையம் காவல்துறையினரிடம் கேட்டபோது இன்று மதியம் மூன்று மணிக்கு வாருங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர் இதனால் குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 258

    0

    0