நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை… ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Author: Babu Lakshmanan
30 April 2024, 6:09 pm

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகாரை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்தது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு தொடர்பாக மதுரை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நிர்மலா தேவி நேற்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டிருந்த பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகிய இருவரை விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் படிக்க: தண்ணீர் பஞ்சத்தில் மக்கள்… கொடைக்கானல் சுற்றுலா அவசியமா..? இவங்க குடும்பம் மட்டுமே அனுபவிக்கனுமா..? அதிமுக கேள்வி!!!

இந்த நிலையில், கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 பிரிவுகளில் நிர்மலா தேவிக்கு மொத்தம் ரூ.2,47,000 அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 286

    0

    0