பாஜகவுக்கு 400 எல்லாம் இல்ல… பிரதமராக பதவி ஏற்க தயார் ; கொளுத்தி போட்ட சுப்பிரமணியசுவாமி!!

Author: Babu Lakshmanan
1 May 2024, 1:24 pm

பா.ஜ.க.விற்கு கடந்த தேர்தலை விட குறைவான தொகுதியுடன் மெஜரீட்டி கிடைக்கும் என்றும், எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக பதவி ஏற்க சொன்னால் நான் தயார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பா.ஜ.க.விற்கு தனிப்பட்ட மெஜரிட்டி கிடைக்கும் என்று நம்புகிறேன். கடந்த முறை கிடைத்த 300 தொகுதிகளில் இருந்து 25 சீட்கள் குறைவாக 275 சீட்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்.

மேலும் படிக்க: பிரபல தனியார் நிதி நிறுவன ஊழியரின் பலே மோசடி.. வாடிக்கையாளர்கள் SHOCK : மனைவியுடன் தில்லு முல்லு!

தமிழ்நாட்டில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நைனார் நாகேந்திரன் ஜெயிக்கலாம். மற்ற வேட்பாளர்கள் பற்றி தெரியாது. ஆனால், இவ்வளவு விளம்பரம் செய்து மக்கள் ஏன் நம்மை நம்பவில்லை. யார் பிரதமராக இருப்பார் என கட்சிக்குள் தேர்தல் நடக்கவில்லை. மோடி தான் எதிர்பார்க்கிறார். ஆனால் மோடிக்கும் போட்டி இருக்க வேண்டும். வேட்பாளர்கள் ஜெயித்து வந்த பின் தான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். கட்சி எம்.பிக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பொருளாதார முன்னேற்றத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எந்த மாற்றமும் வரவில்லை. பொருளாதார ஞானம் உள்ளவர்களையும் மோடி சந்திக்கவில்லை. எல்லாம் எனக்கு தெரியும் என்ற பெருமை இருந்தது. சீனா 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடத்தை எடுத்து விட்டது. அதை மறைத்து வைத்து இருக்கிறார்கள். எந்த பெரிய நாடும் இந்தியாவிற்கு உதவியாக இல்லை. அமெரிக்காவும் எதிரியாகி விட்டது. மோடிக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்து விட்டது. இந்த முறை வேறு ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

திருநெல்வேலியில் வெற்றி பெற வேண்டும். கூட்டம் அதிகமாக சேர்த்து விளம்பரம் செய்பவர்களை நான் நம்ப மாட்டேன். தமிழ்நாட்டில் ஒரு சீட்டிற்கு மேல் கிடைக்குமா என்பது சொல்ல முடியாது. தமிழ்நாடு பா.ஜ.க. தலைமையில் மாற்றம் வர வேண்டும்.

மோடி என்ன சொல்கிறார் என்பதை பார்க்க கூடாது. தேர்தல் அறிக்கையை தான் பார்க்க வேண்டும். ஜாதி, மதம் பார்க்க கூடாது. இந்து என்றால் அனைவரும் ஒன்று தான். பிராமணர் என்பது பழையது. இந்து என்றால் அனைவரும் ஒன்றாக வேண்டும். ஜாதி எல்லாம் மறக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கு மக்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கு மத்திய அரசு தடையாக இல்லாமல் உதவிட வேண்டும்.

சொந்த காலில் நின்று சீனாவை தோற்கடிக்க வேண்டும். சீனாவை வெளியேற்ற வேண்டும். இவை தான் முக்கியமானது. இது குறித்து தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. காவிரி வேண்டுமா..? தண்ணீர் வேண்டுமா..? என்பதை முடிவு செய்தால் வழி இருக்கிறது. கடல் நீரை குடிநீராக்கி விவசாயம், குடிக்க பயன்படுத்தலாம். இஸ்ரேலில் ஒரு ஆறு கிடையாது. சவுதி அரேபியாவில் கடல் நீரை சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

ராகுல் காந்தி கல்லூரியே முடிக்காத மக்கு. நாட்டில் சரியான எதிர்கட்சி தலைவர் கிடையாது. எதிர்கட்சி தலைவராக வரக்கூடிய தெம்பு உள்ளவர் மம்தா பானர்ஜி. கட்சி பா.ஜ.க. எம்.பிக்கள் என்னை பிரதமராக இருக்க சொன்னால் ஏற்பேன். 2 முறை எம்.பியாக இருந்தேன். நிதியமைச்சராக வர போவதாக எல்லாரும் கூறினார்கள். ஆனால் நான் வரவில்லை. பதவி வேண்டும் என்று நானும் கேட்கவில்லை. நிதியமைச்சர் பதவி கஷ்டமானது. நிர்மலா சீத்தாராமன் மாதிரி கைகூலியாக மோடி சொல்வதற்கு கையெழுத்து போட்டு தருவார், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 826

    0

    0