Enjoyment-க்காக பண்ணிட்டேன்.. விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட Video..!

Author: Vignesh
2 May 2024, 10:01 am

20 வருடங்களுக்கு முன்பு அதாவது 2004 ஆம் ஆண்டில் வெளியான கில்லி படம் தற்போது ரசிகர்கள் அதிக அளவில் வந்து கில்லி திரைப்படத்தை தியேட்டரை உற்சாகமாக பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நடிகர் விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அஜித் பிறந்தநாளுக்கு தீனா படம் ரீரிலீஸ் ஆனது. சென்னையின் பிரபல தியேட்டர் ஆன காசி தியேட்டரில் தீனா படம் ரிலீஸ் ஆன நிலையில், அதை கொண்டாட வந்த அஜித் ரசிகர்களில் ஒருவர் மேலே ஏறி தியேட்டர்களில் இருந்த விஜயின் கில்லி பட பேனரை கிழித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Vijay Ajith - Updatenews360

மேலும் படிக்க: அதிக பருக்களாக இருந்த முகம் இப்படித்தான் பாலிஷ் ஆச்சு.. அழகின் சீக்ரெட்டை சொன்ன சாய் பல்லவி..!

இதனால், விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். இதற்கிடையில், கில்லிப்பட போஸ்டர் கிழிக்கப்பட்டது தொடர்பாக தியேட்டர் மேலாளர் ராம்ராஜ் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின், பேரில் சென்னை ஜாஃபர்கான் பேட்டையைச் சேர்ந்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எம்ஜிஆர் நகர் போலீசாரின் மூலம் விஜய் பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் எபினேஷ் கைது செய்யப்பட்டார்.

vijay-ajith

மேலும் படிக்க: அரசியலுக்கு மட்டும் வந்திடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அட்வைஸ்..!

இதனை அடுத்து, தற்போது அந்த இளைஞர் தான் பேனரை கிழித்ததற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்