அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறேனா..? செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்…!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 2:10 pm

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். 45 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் இருக்கும் இவர், அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இதனிடையே, அதிமுக மேற்கு மண்டலத்தில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அவரை தொடர்பு கொண்டு பேசினர்.

மேலும் படிக்க: நீங்க பேசாததை விடவா அவரு பேசிட்டாரு…? பேச்சு பேச்சாகத்தான் இருக்கனும் ;சவுக்கு சங்கருக்கு பாஜக ஆதரவு!!

இந்தநிலையில், இந்த தகவலை மறுத்துள்ள செங்கோட்டையன், 45 ஆண்டு காலமாக அரசியலில் எந்த ஒரு அரசியல் கட்சினரும் சிறு குற்றம் கூட சொல்லமுடியாத அளவிற்கு தனது அரசியல் பயணம் நேர்மையாக தொடர்ந்து வருவதாகவும், தன்னைப்பற்றி அவதூறாகவும் சற்றும் உண்மையில்லாத வகையிலும் செய்தியை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை தாங்களாகவே வெளியிடுவது பத்திரிகை தர்மம் இல்லை என்றும், இது போன்ற உணமைக்கு புறம்பான செய்தியை வெளிட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் உள்ள கோடான கோடி தொண்டர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்கத்திற்கு நான் தூணாக நின்று பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 372

    0

    0