கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர கண்காணிப்பு : பயணிகள் SHOCK!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 3:52 pm

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர கண்காணிப்பு : பயணிகள் SHOCK!

கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த 29ஆம் தேதி மாலை 6:50 மணிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில் கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

மேலும் படிக்க: பாம்பு கடிக்கு ஆளான இளைஞர்.. கங்கை நதியில் கட்டி வைத்த உறவினர்கள்.. முடிவில் TWIST : ஷாக் VIDEO!

மேலும் சோதனை முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்தது வதந்தி என தெரியவந்த்ததை அடுத்து கோவை நிலைய தலைமை பாதுகாப்பு அலுவலர் மேத்யூ என்பவர் பீளமேடு காவல் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நாளில் கோவா விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!