தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்ற நிறுவனம்.. குவியும் பாராட்டு : வைரலாகும் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 6:35 pm

தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்ற நிறுவனம்.. குவியும் பாராட்டு : வைரலாகும் VIDEO!

மே தினமான நேற்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடினர். மேலும் அரசு நிறுவனங்கள் அரசு சார்பு நிறுவனங்கள் தனியார் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தை கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் இயற்கை விவசாயத்தை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லும் சத்யம் பயோ நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமார் இந்த மே தினத்தின் தொழிலாளர்களை மகிழ்ச்சி வைக்கும் வகையில் அவர் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தொழிலாளர்களை தனது சொந்த செலவில் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு சுற்றுலாவுக்காக அழைத்து சென்றுள்ளார்.

மூன்று வேலை உணவுகள் அளித்து மீண்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்திலேயே அழைத்து வருகிறார். இந்த நிகழ்வு இணையதளத்தில் வைரலாகி உள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி