Handsome ஹீரோவை போல் அசத்தல் போஸ்.. திருமணத்தில் விஜய் மகன் சஞ்சய் எடுத்த Photoshoot..!
Author: Vignesh4 May 2024, 12:03 pm
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் லைக்கா நிறுவனம் தறிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.
இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தன் மகன் ஹீரோவாக வேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றார்.
மேலும் படிக்க: அப்பா, அம்மா…. மிருணால் தாக்கூரின் அழகான குடும்ப புகைப்படம் இதோ..!
இந்நிலையில் விஜயின் தந்தை தொழில் ரீதியான சந்திப்பு ஒன்றில் தான் தனக்கிருக்கும் செல்வாக்கை வைத்து பேரனுக்கு சான்ஸ் கொடுக்க சொல்லி கேட்டதாகவும் உடனே ஒப்புக்கொண்டதாம் லைக்கா நிறுவனம்.
முன்னதாக, விஜயின் துணையில்லாமல் சஞ்சய் தனது அறிமுக படத்தின் வாய்ப்பை கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதை போல், தனது மகனின் படத்தைப் பற்றி பொதுவெளியில் விஜயும் பேசுவது இல்லை. இந்நிலையில், சஞ்சய் இயக்கப் போகும் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஹீரோ குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
மேலும் படிக்க: டக்குனு இப்படி சொல்லுவாங்கன்னு நினைக்கல.. விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஜோதிகா சொன்ன பதில்..!
ஆனால், கவின் போன்ற இளம் நடிகர்களின் பெயர் இந்த லிஸ்டில் அடிபட்டு வந்தது. தற்போது, வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க மலையாள நடிகர் துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கிட்டத்தட்ட இது உறுதியாகிவிடும் என்கின்றார்கள். முதல் படத்திலேயே சஞ்சய்க்கு துல்கர் போன்ற முன்னணி நட்சத்திரத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யும் கலந்துகொண்டிருக்கிறார். அவர் ஷங்கர் மகள்கள் உடன் போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோ வைரல் ஆகி வருகிறது.