பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பி போனது பாஜகவுக்கு தெரியும் : பரபரப்பு கடிதம் எழுதிய சித்தராமையா!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 4:31 pm

பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பி போனது பாஜகவுக்கு தெரியும் : பரபரப்பு கடிதம் எழுதிய சித்தராமையா!

கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது, பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு பாதுகாக்கிறது.

அவர் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம். அவர் இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

அவர் மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் தெரிந்தும் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என சித்தராமையா கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 272

    0

    0