ஒரு மாசம் கூட தாங்காது.. திரிஷா வித்தியாசமான ஆளா இருக்காங்களே..!

Author: Vignesh
4 May 2024, 6:11 pm

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஆத்தாடி இம்புட்டு விலையா?.. ஷங்கர் மகள் கல்யாணத்தில் கண்ணைப் பறித்த நயனின் Watch..!

பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதையடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.

trisha - updatenews360 1

மேலும் படிக்க: அந்த மாதிரி பார்த்தாரு.. விஜய் குறித்து உண்மையை வெளியிட்ட கில்லி பட நடிகை..!

இந்நிலையில், த்ரிஷா இன்று அவரது 41வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவர் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், அவரிடம் நண்பர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில், அளித்தவர் நண்பர்களுடன் ஒரு மாதம் ஒன்றாக இருந்தால் கண்டிப்பா சண்டைதான் வரும் நிச்சயம் தாங்காது ஏதாவது, ஒன்று நடந்து விடும். அதே சமயம், மிருகங்களோடு நான் எத்தனை காலம் வேண்டுமானாலும் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர் த்ரிஷா வித்தியாசமான ஆளாக இருக்காங்களே என்று கூறி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 304

    0

    0