இன்று வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்.. SMS மூலமாக மாணவர்களுக்கு முடிவுகளை அனுப்ப ஏற்பாடு!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2024, 8:28 am

இன்று வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்.. SMS மூலமாக மாணவர்களுக்கு முடிவுகளை அனுப்ப ஏற்பாடு!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த எழுதி இருக்கிறார்கள்.

இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்து முடிந்தது. இந்நிலையில் ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, மே 6-ந்தேதி(இன்று) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.மேலும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  • Salary in cinema 25 வருஷம் சினிமால இருந்தா சம்பளம் கிடைக்காது, ஆனால்?- காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ