+2 தேர்வில் முதலிடம் பிடித்த மாவட்டம் எது தெரியுமா? அட மீண்டும் மீண்டுமா? புதிய சாதனை!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2024, 10:46 am
+2 தேர்வில் முதலிடம் பிடித்த மாவட்டம் எது தெரியுமா? அட மீண்டும் மீண்டுமா? புதிய சாதனை!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.
ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். அறிவியல் பாடத்தில் 96.33 சதவீத மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீத மாணவர்களும், வேதியியலில் 99.14 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகித்துடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. திருப்பூரில் தேர்வு எழுதிய மாணவர்களில் 97.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), அரியலூர் (97.25%), கோவை (96.97%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அடிப்படையிலும் திருப்பூர் (95.75%) முதல் இடத்தில் உள்ளது. அரியலூர் (95.64%), ஈரோடு (95.63%), சிவகங்கை (95.56%), தூத்துக்குடி (94.13%) ஆகிய மாவட்டங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.