கண்ணதாசனா? எம்எஸ் விஸ்வநாதனா? மீண்டும் வைரமுத்து கிளப்பிய சர்ச்சை..!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2024, 11:05 am

கண்ணதாசனா? எம்எஸ் விஸ்வநாதனா? மீண்டும் வைரமுத்து கிளப்பிய சர்ச்சை..!!!

மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கூறுகையில்: இளையராஜா விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.

எம்எஸ்வி யா? கண்ணதாசனா என்ற கேள்விக்கு:உடலா உயிரா என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் எம்எஸ்வியா கண்ணதாசனா என்கிற கேள்விக்கு பதில். எம் எஸ் வி உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும் உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது.

இந்த மாநாடு பயனுள்ளதாக அமைந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் பரிசீலனை செய்யும் என்று நான் நம்புகிறேன். வணிகர்கள் தான் ஒரு சமூகத்தின் இரத்த ஓட்டம். வணிகர்கள் தான் பல்வேறு இடங்களில் விளையும் பொருட்களை நமது வீட்டுக்குள் கொண்டு வந்து உதிரத்தில் சேர்க்கிறார்கள் வணிகர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

  • Rajkamal Films Fraud Alert வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!