‘எல்லா வாஷிங் மெஷின்களுக்கும் காலாவதி தேதி இருக்கும்’ ; பாஜகவை கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்!!

Author: Babu Lakshmanan
6 May 2024, 10:01 pm

எல்லா வாஷிங் மெஷின்களிலும் காலாவதியாவதற்கான தேதி இருக்கும் என்று மத்திய பாஜக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

7 நாடாளுமன்ற கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நாளை 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து… பைப்பில் துணி சுற்றி தாக்கிய போலீசார் ; வழக்கறிஞர் பகீர் தகவல்!!

தொடர்ந்து 2 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடத்திய நிலையில், ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமா? அல்லது பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி நாடு முழுவதும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், எல்லா வாஷிங் மெஷின்களிலும் காலாவதியாவதற்கான தேதி இருக்கும் என்று மத்திய பாஜக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “எல்லா வாஷிங் மெஷின்களும் காலாவதி ஆவதற்கான தேதியைக் கொண்டிருக்கும்” என்று கூறி, வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் பாஜகவை வாஷிங் மெஷின் என்று விமர்சித்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் அதே பாணியில் பாஜகவை விமர்சித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்