‘நீ மீசை வச்ச ஆம்பள தானே… பொம்பளைங்கள எதுக்கு இழுக்கிற’… சவுக்கு சங்கரை விமர்சித்த வீரலட்சுமி…!!!
Author: Babu Lakshmanan7 May 2024, 4:29 pm
சவுக்கு சங்கர் கூறியதை தனது யூடியூபில் வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூடியூப் உரிமையாளர் ஃபெலிக்ஸை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரெட் பிக்ஸ் பிலிப்ஸ் மற்றும் youtuber சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி கூறியதாவது :- தமிழ்நாட்டின் பெண் காவலர்களையும், நேர்மையான உயர் காவல் அதிகாரிகளையும் மற்றும் நீதித்துறையைச் சார்ந்தவர்களையும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு பெண்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, ஆதாயம் அடையும் ரெட் பிக்ஸ் பிலிப்ஸ் மற்றும் youtube சவுக்கு சங்கர் மீதும் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை போலீசார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க: இது என்ன, இப்படியா…? இடுகாட்டை விட மோசமா இருக்கு…? அமைச்சர் எ.வ.வேலுவை சீண்டிய செல்வப்பெருந்தகை..!!!
தற்போது சவுக்கு சங்கர் கைது செய்து சிறையில் இருக்கும் பட்சத்தில், பெண்களைப் பற்றி அவதூறாக காணொளி வீடியோ வெளியிட்ட ரெட் பிக்ஸ் உரிமையாளர் மீதும் தக்க கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சவுக்கு சங்கர் மீது போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு ஒரு சில கட்சியினர், பாஜக வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் அருகதை அற்றவர்கள்.
சவுக்கு சங்கர் என்பவர் விஜிலென்ஸ் பணியாளராக இருந்தபோது, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பணியை விட்டு நிரந்தரமாக வெளியேற்றினர். நான் சவுக்கு சங்கரை பார்த்து கேட்கிறேன். நீயும் ஒரு தாய் வயித்துல தானே பொறந்திருப்ப? நீயும் ஒரு பெண்ணின் கருவில் இருந்து தானே வந்திருப்ப? உன் வீட்டிலேயும் அக்கா தங்கச்சி இருப்பாங்கல. அதை யோசிச்சு பார்க்காமல் மற்ற பெண்களை பற்றி நீ பேசிருக்க.
அப்படிப்பட்ட நீ இப்போது சமூக ஆர்வலர் என்கிற பெயரிலும், பத்திரிகையாளர் என்கிற பெயரிலும் ஒரு யூடியூபை ஆரம்பிச்சிட்டு, அதில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிட்டு இருக்க. பெண் போலீஸார் பற்றி தவறாக பேசிய சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஃபெலிக்ஸையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். ஒரு அரசாங்கத்தை விமர்சிக்கணும்னா நேரடியாக பேசு. ஒரு ஆம்பளைய பற்றி பேசு. நீ மீசை வெச்ச ஆம்பள தானே.. ஆம்பள டூ ஆம்பள பேசு. ஆம்பள டூ ஆம்பள தான் மோதணும். எதுக்கு இடையில் பெண்களை பற்றி நீ பேசுற?, எனக் கூறினார்.