நள்ளிரவில் தனியாக இருந்த காதல் ஜோடி… திடீரென என்ட்ரி கொடுத்த கும்பல் ; வலைவீசி தேடும் போலீசார்…!!!
Author: Babu Lakshmanan7 May 2024, 4:43 pm
பல்லடம் அருகே தனியாக இருந்த காதல் ஜோடியை மிரட்டி செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறித்துச் சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த முத்தழகி என்பவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று அருள்புரம் அருகே உப்பிலிபாளையம் என்ற இடத்தில் இரவு 11 மணியளவில் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஐந்து இளைஞர்கள் காதல் ஜோடியை வீடியோ எடுத்து அவர்களை பயங்கரமாக தாக்கியுள்ளனர். பின்னர் விஜயகுமார் மற்றும் முத்தழகியிடம் இருந்த செல்போன், அவர்கள் அணிந்திருந்த மூக்குத்தி, செயின் மற்றும் விஜயகுமாரின் இரு சக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
மேலும் படிக்க: ‘நீ மீசை வச்ச ஆம்பள தானே… பொம்பளைங்கள எதுக்கு இழுக்கிற’… சவுக்கு சங்கரை விமர்சித்த வீரலட்சுமி…!!
விஜயகுமார் அளித்த புகாரியின் பேரில் பல்லடம் காவல்துறையினர் அந்த இளைஞர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் அருள்புரத்தில் உள்ள கறிக்கடையில் பணிபுரிபவர்கள் என்பதும், சேகம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் ஆகாஷ், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த முத்து என்பவரின் மகன் ராஜா, முருகன் என்பவரின் மகன் மணிகண்டன், ஜெயக்குமார் என்பவரின் மகன் சக்திராகேஷ் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி தலைமையிலான சிறப்பு காவலர்கள், ராஜா, மணிகண்டன், சக்திராகேஷ் ஆகியோரை திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் காதல் ஜோடியை மிரட்டி அவர்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.