வெங்கட் பிரபு பட போஸ்டரை அப்பட்டமாக காபி அடித்து ஆட்டைய போட்ட ஹாலிவுட்.. இதை யாரும் எதிர்பார்க்கல..!

Author: Vignesh
7 May 2024, 6:27 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

Goat

மேலும் படிக்க: நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இத்தனை காலம் விலகியிருந்தது ஏன்? PERSONAL விஷயங்களை பகிர்ந்த பாவனா..!

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். படப்பிடிப்பு வேலைகள் ஓரளவுக்கு முடிந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர்.

maanadu

மேலும் படிக்க: ஒரேயடியா ஏறுதே.. கோடியில் புரளும் நடிகை தமன்னா.. சம்பளத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே. முன்னதாக அவர் இயக்கிய மாநாடு படத்தில் டைம் லுப் கதை அடிப்படையில் உருவாக்கி இருந்தார். அது ஹாலிவுட்டின் பிரபலமான ஒன்றுதான் அதை காப்பி அடித்துவிட்டார் என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், மாநாடு படத்தின் போஸ்டரை அப்படியே ஒரு ஹாலிவுட் சீரிஸ் காபி அடித்து இருக்கிறது. தமிழ் படத்திலிருந்து அவர்கள் காப்பி அடித்தது பெருமையென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

maanadu

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!