கோத்தகிரியைப் போல கொடைக்கானலில் நடந்த சம்பவம்… சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து… இடிபாடுகளில் சிக்கிய பயணிகள்!

Author: Babu Lakshmanan
7 May 2024, 9:16 pm

பழனி கொடைக்கானல் சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனை அடுத்து கொடைக்கானல் செல்லும் கூட்டத்தை கட்டுபடுத்திடவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் தமிழக அரசு நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கட்டுபாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் இ பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

மேலும் படிக்க: திமுகவுடன் மதிமுக இணைப்பா…? வைகோ எடுத்த திடீர் முடிவு…? பரிதவிக்கும் மதிமுக நிர்வாகிகள்….!

இந்த நிலையில், சிதம்பரம் கடலூர், நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து இன்று சுற்றுலா வந்த 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு, பழனி வழியாக வந்து கொண்டிருந்தபோது, பழனியில் இருந்து ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வளைவில் திரும்பும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணித்த 20 பேரில் 15 பேர் காயமடைந்தனர். இதில் ஒருவருக்கு மட்டும் கை முறிவு ஏறபட்டது. இதில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vaadivaasal Tamil movie வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!
  • Views: - 397

    0

    0