விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் பிரபல ஹீரோ.. அட இவரா? வந்தா நல்லா இருக்குமே..!

Author: Vignesh
8 May 2024, 3:59 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

Goat vijay

சமீபத்தில் வெளிவந்த விசில் போடு பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜூன் மாதம் கோட் படத்தின் இரண்டாவது சிங்கில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில், சிஎஸ்கே அணியில் இருந்து மூன்று வீரர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் என சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Vijay

தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், கிளைமாக்ஸ் கட்சியில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கிறார் என இணையதளத்தில் தகவல் ஒன்று உலா வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி நடந்தால் முதல்முறையாக விஜய்யுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் இதுவே ஆகும். இதற்கு முன்னர் விஜயின் திரைப்படத்தின் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மாஸ் லுக்கில் சிம்பு.. Thug life ப்ரோமோ Video வெளியிட்டு உறுதி செய்த படக்குழு..!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 281

    0

    0