அட ராயன் பட கதை இதுதானா?.. அப்போ, சும்மா ரகளையா இருக்குமே.. கசிந்த தகவல்..!
Author: Vignesh9 May 2024, 2:03 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார். இதன் பின்னர், தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்திப் கிஷான், காளிதாஸ், ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். சமீபத்தில், தான் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது.
மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!
தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற ஜூன் மாதம் வெளியாக காத்திருக்கும் ராயன் திரைப்படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி உள்ளது. அதாவது, தனுஷின் குடும்பத்தை கொலை செய்தவர்களை தேடிச் செல்லும் தனுஷ் ஒரு Under world க்குள் செல்ல அதன் பின்னர் என்ன நடந்தது. தன் குடும்பத்தை கொன்றவர்களை பழி வாங்கினாரா? என்பதுதான் ராயன் படத்தின் கதை என தகவல்கள் வெளியாகி உள்ளது. ராயன் படத்தின் கதை குறித்து இணையதளத்தில் கசிந்துள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் தற்போது, படு வைரலாகி வருகிறது. ஆனால், இதுதான் ராயன் படத்தின் கதை என்றும், எந்த அளவிற்கு இது உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.