அந்த விஷயத்தில் LOCK செய்த விக்கி.. நயன்தாராவே நினைச்சாலும் டைவர்ஸ் பண்ண முடியாது..!

Author: Vignesh
10 May 2024, 11:01 am

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

nayantha

மேலும் படிக்க: MINGLE ஆகும் முரட்டு SINGLE… 2வது திருமணத்துக்கு தயாரான பிரபல VJ!! (Video)

இந்தியாவில், அழகு சாதன பொருட்கள் முதல் சானிடரி நாப்கின் வரை விற்பனை செய்ய வரும் நயன்தாரா கனடா நாட்டிலும் தனது புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில், சூப்பர் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், நடிகை நயன்தாரா கே ஜி எஃப் ஹீரோ யாஷ்க்கு சகோதரியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதாவது, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் திரைப்படத்தில் தற்போது கே ஜி எஃப் ஹீரோ யாஷ் நடித்துவருகிறார்.

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!

இப்படத்தில் யாஷ்டன் இணைந்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க இருந்தார். அதுவும் அவருடைய சகோதரி கதாபாத்திரத்தில் ஆனால், தற்போது கால்ஷிப்ட் இல்லை என்பதால் டாக்ஸிக் படத்திலிருந்து கரீனா கபூர் விலக்கி விட்டாராம். அவருக்கு பதிலாக தான் நடிகை நயன்தாராவை கமிட் செய்ய முடிவு செய்து அவரிடம் கதையை கூறியுள்ளார் கீது மோகன்தாஸ்.

yash

மேலும் படிக்க: வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம்.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சகிலா..! (Video)

நயன்தாராவுக்கு கதை பிடித்துப் போக யாஷ்டன் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் எனக்கு கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில், நயன்தாரா குறித்து ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கணும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. புளியங்கொம்ப புடிச்சா மட்டும் பத்தாது அதை கைக்குள்ள வச்சிக்கிறது எப்படி என்கிற திறமை விக்கி கிட்ட கத்துக்கணும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: கிழவி வந்துட்டா .. ரசிகர்களால் அசிங்கப்படுத்தப்பட்ட கனவு கன்னி..!

அதாவது, விக்கி நயனை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற வதந்தி முடிவுக்கு வந்துவிட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும், அப்படி நயன்தாராவே நினைத்தாலும் விக்கியை விவாகரத்து பண்ணிவிட முடியுமா என்ற கோணத்தில் யோசித்தால், எப்படி இருக்கும். அதற்கு கிடைத்த பதில் தான் லேடி சூப்பர் ஸ்டார் ஆக சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா தானாக முன்வந்து நினைத்தாலும் தன் காதல் கணவரை பிரிய முடியாதாம்.

nayanthara-vignesh 2

அதாவது, நயன்தாரா தொழிலுக்கு மேல் தொழில் தொடங்கி வருவது எல்லோரும் அறிந்த விஷயம் தான். அவரை பிசினஸில் கவனம் செலுத்த ஐடியா கொடுத்ததே விக்னேஷ் சிவன் தானாம். இதனை பல மேடைகளில் நயன்தாராவே பேசி இருப்பார். உண்மையில், நயன்தாரா கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்து முதலீடு போட்ட அத்தனை தொழில்களிலும் விக்னேஷ் சிவன் பார்ட்னர்ஷிப்பில் இருக்கிறது. ஒவ்வொரு தொழிலும் விக்கி பவுண்டராக இருந்தால், நயன்தாராகோ பவுண்டராக இருப்பார். நயன்தாரா பவுண்டராக ஆக இருந்தால் விக்னேஷ் சிவன் கோபவுண்டராக இருப்பார். ஆகவே, இதனை கருத்தில் கொண்டு தான் நயன்தாராவே நினைத்தாலும் விக்கியை கழட்டி விட முடியாது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!