சவுக்கு சங்கரின் வீடு, அலுவலகத்தில் திடீர் ரெய்டு.. சென்னை அழைத்து வரப்படும் சூழலில் போலீசார் சோதனை…!!!

Author: Babu Lakshmanan
10 May 2024, 11:21 am

சென்னையில் சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை போலீசார் கடுமையாக சித்ரவதை செய்து கை எலும்பை உடைத்து விட்டதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதனை ஏற்று நீதிமன்றம் கொடுத்த அனுமதியின் பேரில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, மே 22ம் தேதி வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க: 10ம் வகுப்பு ரிசல்ட் அப்டேட் ; அரியலூர் தான் டாப்… மோசமான தேர்ச்சி சதவீதம் எந்த மாவட்டத்தில் தெரியுமா..?

சவுக்கு சங்கருக்கு எதிராக திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இசவுக்கு சங்கர் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளதால் அந்த வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மற்றும் வீரலட்சுமி ஆகியோர் அளித்த புகாரில் ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த இரு வழக்குகளிலும் யூ டியூபர் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று கைது செய்தனர். இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா்.

இந்த நிலையில், சென்னையில் பதியப்பட்ட இரு வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த சூழலில், சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 287

    0

    0