‘ரொம்ப கோபக்காரனே இருப்பாரோ’… நாய் கழுவிய தண்ணீர் வீட்டின் முன்பு வந்ததால் ஆத்திரம் ; பெட்ரோல் குண்டுவீசிய சிறுவன்..!!
Author: Babu Lakshmanan10 May 2024, 2:32 pm
நாய் கழுவிய தண்ணீர் வீட்டின் முன் வந்ததால் மதுரையில் பெட்ரோல் குண்டை வீசிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை ஆதிமூலம் பிள்ளை சந்து அருகில் குடியிருந்து வருபவர் மணியம்மை (58). இவரது வீட்டின் அருகே சுந்தர்ராஜன் என்பவர் குடியிருந்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தர்ராஜன் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கழுவிய போது, அந்த தண்ணீர் அருகில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளது.
மேலும் படிக்க: பாஜக நிர்வாகி திடீர் கைது… அடுத்தது பாஜக தலைவருக்கு குறி? காங்கிரஸ் புகாரில் தேர்தல் ஆணையம் ஆக்ஷன்!!!
இது பற்றி அருகில் உள்ள வீட்டில் இருப்பவர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், நேற்று இரவு சுந்தர்ராஜன் உறவினரான 17 வயது சிறுவன் மணியம்மை வீட்டு முன்பாக பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். இது பற்றி திலகர்திடல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.