அருள் வாக்கு கேட்க சென்ற பெண்.. ஆடையில்லாமல் நிற்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்..!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 6:56 pm

அருள் வாக்கு கேட்க சென்ற பெண்.. ஆடையில்லாமல் நிற்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சத்யா என்ற பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.

சத்யா தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், தனது கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் யூடியூபில் மாந்திரீகம் தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார்.

அப்போது கேரள மாந்திரீகம் என்ற youtube சேனலில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜுன் கிருஷ்ணன் என்ற சாமியாரின் வீடியோக்களை பார்த்துள்ளார்.

பின்னர் அர்ஜுன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்று மாந்திரீக முறையில் தனது கணவன் மற்றும் மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

பரிகாரங்கள் செய்ய முன் பணமாக பத்தாயிரம் ரூபாய் கட்டுமாறு அர்ஜுன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பணத்தை கட்டிய பின்,சிறிது நாட்கள் கழித்து பரிகாரம் செய்வதற்கு அதிக செலவாகும் எனவும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சாமியார் அர்ஜுன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கணவனுடன் சேர வேண்டும் என்ற ஆசையில் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி ஒன்றை லட்சம் ரூபாய் பணத்தை சாமியாரிடம் சத்யா கொடுத்துள்ளார்.

பணத்தை கொடுத்தும் எந்த பூஜைகளையும் செய்யாமல் சாமியார் தாமதித்து வந்த நிலையில் பணத்தை திருப்பித் தருமாறு சத்யா கேட்டுள்ளார்.

தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு சாமியார் தெரிவித்த நிலையில் வீட்டுக்கு சென்ற சத்யாவை கட்டாயப்படுத்தி, வீட்டு கதவுகளை மூடிவிட்டு சத்யாவின் ஆடைகளை அகற்றி வீடியோ எடுத்ததாகவும், அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இதேபோன்று இரண்டு மூன்று முறை வீட்டுக்கு வரவழைத்து தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், ஒப்புக் கொள்ளாவிட்டால் சத்யாவின் வீடியோவை youtube சேனலில் வெளியிடுவேன் என சாமியார் மிரட்டியதாகவும், பாதிக்கப்பட்ட சத்யா திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: தந்தை இல்லை.. பனியன் கம்பெனிக்கு சென்று படிக்க வைத்த தாய் : 10ம் வகுப்பு தேர்வில் இன்ப அதிர்ச்சி கொடுத்த இரட்டையர்கள்!

மேலும் தன்னைப் போன்று 50க்கும் மேற்பட்டோர் இதுபோல சாமியார் அர்ஜுன் கிருஷ்ணனால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் எனவும், பணத்தை திருப்பித் தராமல் சாமியார் தலைமுறைவாகி உள்ளார் எனவும், தனது குடும்பத்தில் அவமானப்பட்டு உயிரை விடுவதை விட என் பணத்தை தராவிட்டால் சாமியாரின் கோயில் முன்பு தீக்குளித்து உயிர் துறப்பேன் எனவும் தனது பணத்தை மீட்டுத் தருமாறு சாமியாரின் மொபைல் போனில் உள்ள தனது அந்தரங்க வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும், தன்னைப் போன்று மாந்திரீகத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட பெண் சத்யா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் சாமியாரின் கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டு இருப்பதாகவும், சாமியார் அர்ஜுன் கிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?