நீதிக்கு அடையாளம்.. I.N.D.I.A கூட்டணியை பலப்படுத்திய கெஜ்ரிவால் விடுதலை : முதலமைச்சர் ஸ்டாலின் பூரிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 7:46 pm

நீதிக்கு அடையாளம்.. I.N.D.I.A கூட்டணியை பலப்படுத்திய கெஜ்ரிவால் விடுதலை : முதலமைச்சர் ஸ்டாலின் பூரிப்பு!

டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமின் வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது.

மேலும் படிக்க: அருள் வாக்கு கேட்க சென்ற பெண்.. ஆடையில்லாமல் நிற்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்..!

அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டணியை பலப்படுத்துகிறது. இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை வலுப்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…