சிறு சிறு தப்புக்கு எல்லாமா…? சார்பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறையிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவு

Author: Babu Lakshmanan
11 May 2024, 12:09 pm

சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆவணப்பதிவு தொடர்பாக பதிவு அலுவலகத்திற்கு வரும்‌ ஆவணதாரர்களால்‌ பதிவுக்கு தாக்கல்‌ செய்யப்படும்‌ ஆவணங்களில்‌ காணப்படும்‌ சிறு பிழைகள்‌ தொடர்பாக உரிய காரணங்களின்றி அலைக்கழிக்கப்படுவதாகவும்‌, அவர்களால்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட ஆவணங்கள்‌ தொடர்பாக சார்பதிவாளர்களால்‌ பிற அலுவலர்களுக்கு பிற சார்பதிவகங்களுக்கு அணுப்பி வைக்கப்படும்‌ கடித போக்குவரத்து ஆவணதாரர்களாகிய அவர்களுக்கு எவ்வித தகவலும்‌ தெரிவிக்கப்படுவதில்லை எனவும்‌ பதிவுத்துறை தலைவரின்‌ கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.

மேலும் படிக்க: முன்னாள் குமாஸ்தா தலை துண்டித்து படுகொலை… சினிமா பட பாணியில் தப்பியோடிய கொலையாளிகளை பிடித்த போலீஸ்!!

ஒரு நேர்வில்‌ வங்கி ஒன்றால்‌ உரியவாறு எழுதப்பட்ட விற்பனைச் சான்றாவணம் உரிய கோர்வையின்‌ பொருட்டு ஒரு சார்பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்‌ அச்சார்பதிவாளர்‌ அந்த ஆவணத்தில்‌ கண்டுள்ள சொத்தானது தமது அலுவலக வரம்பிற்கு உட்பட்டதன்று என பிறிதொரு சார்பதிவகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்‌.

இது குறித்து தொடர்புடைய வங்கிக்கோ, ஆவணதாரர்களுக்கோ எவ்வித தகவலும்‌ தெரிவிக்கப்படவில்லை. இதனில்‌ நீதிமன்றம்‌ வரை செல்ல நேர்ந்து ஆவணதாரர்‌ அவதியுற்றதாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்‌ தனது கண்டனத்தையும்‌ வருத்தத்தையும்‌ பதிவு செய்துள்ளது.

இவ்வாறான நேர்வுகளை இனிவரும்‌ காலங்களில்‌ அறவே நிகழாவாறு சார்பதிவாளர்கள்‌ பதிவுக்கு தாக்கல்‌ செய்யப்படும்‌ ஆவணங்கள்‌ குறித்த நிலையினை ஆவணதாரர்களுக்கு உரியவாறு தெரிவித்திடல்‌ வேண்டுமென்றும்‌ ஆவணதாரர்களால். உடணுக்குடன்‌ சரிசெய்யத்தக்க சிறு பிழைகளுக்காக எக்காரணம்‌ கொண்டும்‌ ஆவணதாரர்களை அலைக்கழித்தலாகாது எனவும்‌ இச்சுற்றறிக்கை வாயிலாக வலியுறுத்தப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 285

    0

    0