மதுரையை புரட்டிப்போட்ட கனமழை… தண்ணீரில் தத்தளித்த பார்வையற்ற பாடகர் ; போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
Author: Babu Lakshmanan11 May 2024, 6:29 pm
மதுரையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த கண் தெரியாத பாடகரை தீயணைப்பு துறையினர் கயிறை கட்டி மீட்டனர்.
கடந்த ஒரு மாத காலமாக வாட்டி வந்த நிலையில், தற்போது ஓரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாத பொதுமக்கள் தற்போது பெய்து வரும் மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் எந்த ஒரு முன்னேற்பாடுகளும் இல்லாத மதுரை மாவட்ட நிர்வாகத்தினால், ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே மதுரை தாங்கவில்லை என்று கூறலாம்.
மேலும் படிக்க: 100 சதவீதம் விதிமீறல்… போனா திரும்ப வருமா…? இத்தனை நடந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் திமுக அரசு… அதிமுக கடும் கண்டனம்
அந்த அளவிற்கு மழை நீர் வெளியே செல்ல முடியாமல் சாலையில் தேங்கிய நிலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை ராஜா மில் ரோடு கருடர் பாலம் வழியாக சென்ற இன்னிசை கச்சேரி குழுவினர் ஐந்து நபர்கள் நாமக்கல் மற்றும் மதுரை சார்ந்தவர்கள் அவ்வழியாக சென்ற போது அங்கே தேங்கிருந்த தண்ணீரில் மாட்டிக் கொண்டனர்.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மழை நீரில் சிக்கிக் கொண்ட அந்த வாகனத்தை கயிற்றால் கட்டி இழுத்தனர்.
மழை நீரில் சிக்கிக் கொண்ட அந்த ஐந்து பேரை மீட்டனர். அந்த வாகனத்தின் ஓட்டுனர் நாகேந்திரன், அப்துல்லா, மாரியப்பன், அம்பிகா மற்றும் விக்னேஷ் ஆகிய ஐந்து பேரை மீட்டனர்.