வெளுத்து வாங்கப் போகும் மழை.. 5 மாவட்ட மக்களே கவனமா இருங்க ; வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 1:38 pm

வெளுத்து வாங்கப் போகும் மழை.. 5 மாவட்ட மக்களே கவனமா இருங்க ; வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் 16ஆம் தேதி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு சில இடங்களில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய தினம் (12ம் தேதி) தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: ஆடிப்போன கார்ல்சன்.. உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா : கிராண்ட் செஸ் தொடரில் அசத்தல்!!

மேலும், இன்று (12ம் தேதி) ஒடிசாவின் சில பகுதிகள், கேரளா, மாஹே, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 310

    0

    0