பெலிக்ஸ் ஜெரால்டு உயிருக்கு ஆபத்து… சவுக்கு சங்கரை போல பல வழக்குகள் பதிய சதி? மனைவி கண்ணீர் புகார்!
Author: Udayachandran RadhaKrishnan12 May 2024, 6:46 pm
பெலிக்ஸ் ஜெரால்டு உயிருக்கு ஆபத்து… சவுக்கு சங்கரை போல பல வழக்குகள் பதிய சதி? மனைவி கண்ணீர் புகார்!
சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என முன் ஜாமின் கேட்டு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி குமரேஷ் பாபு கடும் கண்டனங்களை தெரிவித்தார். மேலும் யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தது என்று ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் இருப்பதாக நாடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் படிக்க: ஆளுநர் ஒப்புதலுடன் அண்ணாமலை மீது வழக்கு.. திமுக அரசுக்கு நன்றி கூறி விமர்சித்த பாஜக தலைவர் ; நடந்தது என்ன?
நொய்டாவில் அறை ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவரை நேற்று அதிகாலையில் போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள அவர் மனைவி,”கடந்த பத்தாம் தேதி இரவு 11:20 அவருக்கு அலைபேசி மூலம் பலமுறை அழைத்தபோது அவர் எடுக்கவில்லை.
ஒரே ஒரு முறை மட்டும் எடுத்து, தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதையடுத்து அருகில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் போனை கொடுத்தார். அவரிடம் எதற்காக எனது கணவரை கைது செய்திருக்கிறீர்கள் எப்போது ஊருக்கு கொண்டு வருவீர்கள்? என்று கேட்டபோது இரவு ரயிலில் வர முடியாது, அதனால் மறுநாள் காலையில் ரயிலில் அவரை திருச்சிக்கு கொண்டு வருவதாக என்னிடம் தெரிவித்தனர்.
மறுநாள் காலையில் தொடர்பு கொண்டபோது காலையில் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அதன் பின்னர் பலமுறை அழைத்தும் அவர்கள் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.
எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்?, எங்கே கொண்டு செல்கிறார்கள்?. என்னச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. சவுக்கு சங்கரைப் போல எனது கணவரின் உயிருக்கும் போலீஸாரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.