கேப்டனுடன் இணைந்து ரிஸ்வி கொடுத்த அதிரடி.. அசத்தல் வெற்றியை பதிவு செய்த சென்னை ; புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 8:18 pm

கேப்டனுடன் இணைந்து ரிஸ்வி கொடுத்த அதிரடி.. அசத்தல் வெற்றியை பதிவு செய்த சென்னை ; புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களும், துருவ் ஜூரல் 28 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டையும், 2 துஷார் தேஷ்பாண்டே விக்கெட்டையும் பறித்தனர். 142 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.

சிறப்பாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா 27 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் வீசிய பந்தை அவரிடமே கேட்சை கொடுத்து வெளியேறினார்.

அடுத்து டேரில் மிட்செல் களமிறங்க வந்த வேகத்தில் 4 பவுண்டரி என மொத்தம் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து மொயின் அலி களமிறங்கினார். இதனால் சென்னை அணி 8 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்து 67 ரன்கள் எடுத்திருந்தனர்.

களமிறங்கிய மொயின் அலி நிலைத்து நிற்காமல் வெறும் 10 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம்போல வந்த வேகத்தில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என மொத்தம் 18 ரன்கள் எடுத்து நடையை காட்டினார். ஜடேஜா யாரும் எதிபாராபா வகையில் பீல்டரை தடுக்கும் வகையில் ஓடியதால் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

சமீர் ரிஸ்சி அதிரடியாக 8 பந்துகளில் 15 ரன்களை விளாசினார். இறுதியாக சென்னை அணி 18.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசிவரை களத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டையும், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

சென்னையில் 13 போட்டிகள் விளையாடி 7 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…