மக்களவைக்கு 3 முறை தேர்வு.. எளிமையான எம்பி : இறுதிவரை செங்கொடி ஏந்திய எம்பி செல்வராஜ் காலமானார்!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2024, 9:17 am

மக்களவைக்கு 3 முறை தேர்வு.. எளிமையான எம்பி : இறுதிவரை செங்கொடி ஏந்திய எம்பி செல்வராஜ் காலமானார்!

மே 2ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் 1989, 1996, 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில் எம்பியாக தேர்வானார்.

நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, நான்கு முறை இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இரங்கலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். எம் செல்வராசு எம் பி (67) இன்று (13.05.2024) அதிகாலை 02.40 மணிக்கு சென்னை மருத்துவ மனையில் காலமானார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் படிக்க: உல்லாசம் அனுபவிக்கணுமா? இளம் பெண்களை வைத்து பணம் பறிக்கும் கும்பல் : பீதியில் பழனி..!!

பள்ளிக் கல்வியை முடித்து திருவாரூர் திரு வி க அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். மாணவர் பெருமன்றம், இளைஞர பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட தோழர் எம். செல்வராசு அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் இடைக்குழு உறுப்பினர், துணைச் செயலாளர், செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் என பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர். ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திருவாரூர், நாகபட்டினம் என பிரித்து அமைக்கப்பட்ட போது திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர், நாகபட்டினம் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டவர். வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட சித்தமல்லி எஸ். ஜி. முருகையன், மூத்த மகள் கமலவதனத்தை வாழ்விணையராக ஏற்று, அந்த குடும்பத்தின் மூத்த மருமகனாக, அந்தக் குடும்ப பொறுப்புகளை ஏற்று சிறப்பு சேர்த்தவர்.

கமலவதனம் திருவாரூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்ற ஊக்கம் தந்தவர். 1989 ஆம் ஆண்டு நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்..

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தோழர் எம். செல்வராசு எம் பி உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, அதிகாலை 02.40 மணிக்கு காலமானார்.

நாளை (14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும் அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்ந்தி, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது.

அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் கமலவதனம், மகள்கள் செல்வப்பிரியா, தர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 311

    0

    0