மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2024, 10:48 am

மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த நேமளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெட்ரோல் நிலையம் பின்புறம் 35 வயது இளம் பெண் முகத்தில் ஆங்காங்கே காயங்களுடன் சடலமாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து நேமலூர், செதில்பாக்கம், சத்தியவேடு சாலை, மாதர்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது இறந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அரசு மதுபான கடை உள்ளது. அந்த அரசு மதுபான கடையிலிருந்து மூன்று பேர் பெட்ரோல் பங்க் பின்புறமாக ஒரு பெண்ணுடன் செல்லும் காட்சிகள் தெரிந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சம்பவங்களின் ஈடுபட்ட குற்றவாளிகளின் முகத்தை வைத்து பார்த்தபோது அதில் சிலர் இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து அந்த மூன்று நபர்களை அடையாளம் கண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் படிக்க: என் கையை உடைத்தது கோவை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தான் : சவுக்கு சங்கர் புகார்!

இந்த நிலையில் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்பெண் பெட்ரோல் பங்க் இருட்டு பகுதியில் சென்றதாகவும் அதை பின்தொடர்ந்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (25), தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர்( 21), கண்ணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெபக்குமார்(24) ஆகியோர் 3 பேரும் அந்த பெண்ணை கஞ்சா போதையில் சீரழித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது .

இதில் சூர்யா, சுரேந்தர் இருவர் மீது ஏற்கனவே கள்ளக்காதல் விவகார கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து பாதிரிவேடு போலீசார் மேற்கண்ட மூன்று வாலிபர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பாதிரிவேடு காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை கண்டறிய போலீசார் தொடர்ந்து ஆந்திர மற்றும் தமிழ்நாடு எல்லை கிராம பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Kalaipuli S. Thanu updates on Vaadivaasal வாடி வாசலை திறந்து விட்ட எஸ்.தாணு…சீறிப்பாயுமா வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி…!