ஆட்டோவில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயரம்.. காட்டிக் கொடுத்த MERCEDES… பரவிய வீடியோ : ஸ்கெட்ச் போட்ட போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2024, 11:43 am

ஆட்டோவில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயரம்.. காட்டிக் கொடுத்த MERCEDES… பரவிய வீடியோ : ஸ்கெட்ச் போட்ட போலீஸ்!

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் சாலையோரம் உள்ள காட்டுப்பகுதியில் நின்றுகொண்டிருக்கும் ஆட்டோவில், ஓட்டுநர் ஆட்டோவில் தனியாக பயணித்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வைரலான வீடியோ போலீசாரின் பார்வைக்கு தென்பட்து. அந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்தது தெரியவந்தது.

மேலும் படிக்க: தேர்தலில் கள்ள ஓட்டு போட முயற்சி.. வாக்கு இயந்திரங்கள் உடைப்பு : ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நிர்வாகிகள் மோதல்!

சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தபொழுது ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த MERCEDES லோகோவை ஆதாரமாகக் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணை அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?