எம்எல்ஏவை ஓங்கி அறைந்த நபர்… ஆதரவாக நின்ற பொதுமக்கள் ; வாக்குச்சாவடியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
13 May 2024, 3:02 pm

ஆந்திராவில் ஒரு வாக்குச்சாவடியில் எம்எல்ஏ கன்னத்தில் வாக்காளர் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெனாலி என்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்த போது, வாக்களிக்க வந்த எம்எல்ஏ வரிசையில் நிற்காமல் நேராக சென்று வாக்களித்தார்.

அப்போது, வாக்காளர்களில் ஒருவர் வரிசையில் வருமாறு கூறியதால், ஆத்திரமடைந்த எம்எல்ஏ, அந்த நபரை கன்னத்தில் அறைந்தார். உடனே கோபமடைந்த அந்த வாக்காளர், திரும்ப எம்எல்ஏவின் கன்னத்தில் பளார் விட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாக்காளரை அடித்த எம்எல்ஏ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!