இந்த லோக்சபா தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆபத்தில்தான் முடியும்.. பிரசாந்த் கிஷோர் கணிப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2024, 2:13 pm

இந்த லோக்சபா தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆபத்தில்தான் முடியும்.. பிரசாந்த் கிஷோர் கணிப்பு..!!

ஆந்திராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று (மே 13) நடந்து முடிந்துள்ளது. ஆந்திரா அரசியல் கள நிலவரம் குறித்து பேசிய பிரபல அரசியல் பிரமுகர் பிரசாந்த் கிஷோர், ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் 67 தொகுதிகளில் வெற்றி பெறும்.

தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜெகன் மோகன் பெரிய அளவில் தோற்ப்பார்.

ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி 15 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஏராளமான தவறுகளை செய்துள்ளார். முதலில் அவர் தனது தாய் மற்றும் சகோதரியை தனக்கு சாதகமாக வைத்திருக்க தவறி விட்டார்.

மேலும் படிக்க: 4 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் தலைநகரம் : நிபுணர்கள் சோதனை!

கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது.

ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நினைக்கிறார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை என கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 299

    0

    0