பாஜகவுக்கு 100 இடங்கள் கூட கிடையாதாம்…பாமகவை அவர்களின் ஆன்மா மன்னிக்காது ; செல்வப்பெருந்தகை!

Author: Babu Lakshmanan
14 May 2024, 9:34 pm

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இது தொடர்பாக அவர் பேசியதாவது ;-நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தோல்வி அச்சத்தால், நாட்டில் குழப்பத்தையும், வன்முறையை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

மேலும் படிக்க: ரூ.20,000 கோடி செலவு செய்தும் கங்கை தூய்மையாகாதது ஏன்..? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!!

எல்லா மாநிலங்களிலும் பா.ஜனதாவிற்கு எதிராக மக்கள் அணி திரண்டு வருகிறார்கள். இடஒதுக்கீடு நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பா.ம.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாதம். இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிர்நீத்தவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்காது. சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்திட முதல் எதிரியாக இருப்பது பா.ஜ.க, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 487

    0

    0