ரூ.34,000 கோடி வங்கிக்கடன் மோசடி…. DHFL நிறுவன இயக்குநர் அதிரடி கைது…!!

Author: Babu Lakshmanan
15 May 2024, 8:25 am

ரூ.34 ஆயிரம் வங்கிக்கடன் மோசடி வழக்கில் DHFL நிறுவன இயக்குநர் தீரஜ் வதாவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மீது ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக 2022ல் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

மேலும் படிக்க: இதையாவது செய்ய துப்பு இருக்கிறதா..? பரபரப்பை உண்டாக்கிய சுசித்ரா ; திமுகவை விளாசும் அதிமுக..!!

17 வங்கிகள் இணைந்து இந்த மோசடி செய்ததாகக் கூறப்படும் நிலையில், நாட்டிலேயே மிகப்பெரிய வங்கிக் கடன் மோசடியாகும். ஏற்கனவே யெஸ் வங்கியின் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே இருந்த தீரஜ் வதாவனை மீண்டும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

தீரஜ் வதாவனை கைது செய்த சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், அவருக்கு மே 30 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…