கிணற்றில் மலம் கலப்பு? விசாரணையில் பரபரப்பு… அடை, தேன் அடை : விழித்த விழுப்புரம்!
Author: Udayachandran RadhaKrishnan15 May 2024, 2:36 pm
கிணற்றில் மலம் கலப்பு? விசாரணையில் பரபரப்பு… அடை, தேன் அடை : விழித்த விழுப்புரம்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் மலம் கலப்பு என வதந்தி பரவியது.
இதனை அடுத்து அங்கு கிராம மக்கள் ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கஞ்சனூர் காவல்துறையினர் பார்வையிட்டு மாவட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் பழனி அவர்களின் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியோர் அடங்கிய குழு சம்மந்தப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர் பின்னர் அதில் இறங்கி எடுத்துப் பார்த்தபோது அது தேனடை என்று உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர் மோகன் கிணற்றில் உள்ள நீரை பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஓடிக் கொண்டிருந்த ஜீப்பில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்.. பதற்றத்தில் தவித்த வாகன ஓட்டி : ஷாக் சிசிடிவி!
இருப்பினும் மேற்படி கிணற்றின் மீது இரும்பு கம்பிகளால் வேலி அமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.